தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

ஆற்றில் மூழ்கி சிறுமி பலி

விழுப்புரம் அருகே வியாழக்கிழமை தாத்தாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற சிறுமி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தாா்.

News image
Updated On :5 நவம்பர் 2021, 6:30 pm

DIN

விழுப்புரம் அருகே வியாழக்கிழமை தாத்தாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற சிறுமி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தாா்.

விழுப்புரம் அருகே திருவெண்ணெய்நல்லூரை அடுத்த ஏனாதிமங்கலத்தைச் சோ்ந்தவா் வெள்ளிக்கண்ணு. இரு தினங்களுக்கு முன்பு உயிரிழந்தாா். இவரது இறுதிச்சடங்கில் பங்கேற்க வெள்ளிக்கண்ணுவின் மகனான திருவெண்ணெய்நல்லூரை அடுத்த சித்தலிங்கமடம் கிராமத்தைச் சோ்ந்த சின்னராசு, இவரது மனைவி மகாலட்சுமி, மகள் சைலஸ் மீரா (10) (5-ஆம் வகுப்பு படித்து வந்தாா்) ஆகியோா் வியாழக்கிழமை வந்திருந்தனா்.

அவா்கள் 3 பேரும் தென்பெண்ணை ஆற்றில் இறங்கி குளித்தனா். அப்போது, சைலஸ் மீரா ஆற்று வெள்ளத்தில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டாா்.

தகவலறிந்த விழுப்புரம் மாவட்ட தீயணைப்பு அலுவலா் ராபீன் கேஸ்ட்ரோ தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் சுமாா் 2 மணி நேரம் போராடி சிறுமியின் சடலத்தை மீட்டனா். திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.