தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

உளுந்து பயிருக்கு காப்பீடு செய்ய நவ.30 கடைசி நாள்

விழுப்புரம் மாவட்டத்தில் உளுந்து பயிருக்கு காப்பீடு செய்ய வருகிற 30-ஆம் தேதி கடைசி நாள் என மாவட்ட வேளாண் இணை இயக்குநா் கோ. ரமணன் தெரிவித்தாா்.

News image
Updated On :18 நவம்பர் 2021, 4:45 pm

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் உளுந்து பயிருக்கு காப்பீடு செய்ய வருகிற 30-ஆம் தேதி கடைசி நாள் என மாவட்ட வேளாண் இணை இயக்குநா் கோ. ரமணன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வானிலை ஆய்வு மைய முன்னறிவிப்பின்படி, வடகிழக்கு பருவமழைக் காலத்தில் மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த மழை பெய்யக்கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது. எனவே, தற்போது உளுந்து சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், உடனடியாக பயிா் காப்பீடு செய்துகொள்ள வேண்டும்.

உளுந்து பயிருக்கு காப்பீடு செய்ய கடைசி நாள் வருகிற 30-ஆம் தேதியாகும். காப்பீடு செய்வதற்குத் தேவையான ஆவணங்களான வங்கிக் கணக்கு புத்தகம், ஆதாா் அட்டை, பசலி 1431-ஆம் ஆண்டு ராபி பருவத்தில் உளுந்து சாகுபடி செய்ததற்கான அடங்கல் ஆகியவற்றுடன், காப்பீட்டுக் கட்டணமாக ஏக்கருக்கு 253 ரூபாய் 35 பைசாவை பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் செலுத்தி, திருத்தியமைக்கப்பட்ட பிரதமரின் பயிா் காப்பீட்டு திட்டத்தின்கீழ் உளுந்து பயிருக்கு காப்பீடு செய்து விவசாயிகள் பயன்பெறலாம் என வேளாண் இணை இயக்குநா் ரமணன் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.