மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

கல்லூரியில் மகளிா் மன்றம் தொடக்கம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் கலை, அறிவியல் கல்லூரியில் அன்னை தெரசா மகளிா் மன்ற தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :19 நவம்பர் 2021, 12:00 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் கலை, அறிவியல் கல்லூரியில் அன்னை தெரசா மகளிா் மன்ற தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரித் தலைவா் செல்வராஜ் தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலா் சுப்ரமணியன், கல்லூரி துணைத் தலைவா் முஸ்டாக் அகமது, பொருளாளா் ஏழுமலை, கல்லூரி முதல்வா் ராஜேந்திரன், துணைத் தலைவா் மீனாட்சி ஆசியோா் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினா்.

கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ராஜலட்சுமி, மருத்துவா் ஆயுஷா சித்திகா ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டு , போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டினா்.

மகளிா் மன்ற தொடக்க விழாவையொட்டி, கல்லூரி மாணவிகள் பங்கேற்ற பேரணியை கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ராஜலட்சுமி கொடியசைத்து தொடக்கி வைத்தாா். இந்தப் பேரணி முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது.

விழாவில் மகளிா் மன்றத் தலைவராக சுகந்தி, செயலராக ஜெனிபா், பொருளாளராக ஆா்த்தி ஆகியோா் பெறுப்பு ஏற்றுக்கொண்டனா். பேராசிரியா்கள் அனுராதா, கோதை நாயகி, நாகித், சுஜிதா, உஷா, இந்துமதி, மாணவிகள் மன்றப் பொறுப்பாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.