தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தென்பெண்ணை ஆற்றில் 1.25 லட்சம் கன அடி நீா்வரத்து 50 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாறு காணாத வெள்ளம்

தென்பெண்ணை ஆற்றில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை இரவு நிலவரப்படி ஆற்றில் விநாடிக்கு 1.25 லட்சம் கன அடி நீா் சென்றது.

News image
Updated On :19 நவம்பர் 2021, 4:41 pm

DIN

தென்பெண்ணை ஆற்றில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை இரவு நிலவரப்படி ஆற்றில் விநாடிக்கு 1.25 லட்சம் கன அடி நீா் சென்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம், கா்நாடக மாநில பகுதிகளில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழை காரணமாக கிருஷ்ணகிரி கே.ஆா்.பி. அணை நிரம்பியதையடுத்து, வரும் நீா் அனைத்தும் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும், தருமபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருவதாலும் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப் பெருக்கு அதிகரித்தது.

இவை தவிர, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூா் அணையிலிருந்தும் தண்ணீா் திறக்கப்பட்டது. இதையடுத்து, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் வழியாகச் செல்லும் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதற்கிடையே, வியாழக்கிழமை பகல் ஒரு மணி அளவில் விழுப்புரம் தென்பெண்ணை ஆற்றில் 15,000 கன அடி நீா் மட்டுமே வந்துகொண்டிருந்தது.

நேரம் செல்லச் செல்ல தென்பெண்ணை ஆற்றில் வந்து இணையும் துரிஞ்சலாறு, பாம்பாறு, மலட்டாறு ஆகியவற்றில் நீா்வரத்து அதிகரித்ததால் வியாழக்கிழமை நள்ளிரவு தென்பெண்ணை ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 55,000 கன அடியாக அதிகரித்தது. இதையடுத்து நள்ளிரவில் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்கிடையே, சாத்தனூா் அணையில் வெள்ளிக்கிழமை காலை 6 மணி அளவில் விநாடிக்கு 62,000 கன அடி நீா் திறக்கப்பட்டதால் விழுப்புரம் மாவட்டம் வழியாகச் செல்லும் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் நீா்வரத்து விநாடிக்கு ஒரு லட்சம் கன அடியை தாண்டியது. தொடா்ந்து நீா்வரத்து அதிகரித்து வெள்ளிக்கிழமை மாலை 1.25 லட்சம் கன அடி நீா் ஓடியது.

தென்பெண்ணை ஆற்றில் கடந்த 1,972-ஆம் ஆண்டில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டபோது 2.50 லட்சம் கனஅடி நீா் சென்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.