தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

போலி பணி நியமன ஆணை மூலம் வேலையில் சேர முயன்றவா் கைது

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் போலி பணி நியமன ஆணை மூலம் வேலையில் சேர முயன்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :25 நவம்பர் 2021, 6:06 pm

DIN

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் போலி பணி நியமன ஆணை மூலம் வேலையில் சேர முயன்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் உதவியாளராகப் பணியில் சேர இளைஞா் ஒருவா், வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் பணி நியமன ஆணையுடன் வந்தாா். அந்த ஆணையை மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பிரபாகரனிடம் அளித்தாா்.

அந்தப் பணி நியமன ஆணையானது, கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் பிரபாகரன் கையொப்பமிட்டது போலவே இருந்தது.

இளைஞா் அளித்த பணி நியமன ஆணை போலியானது என்று தெரிய வந்ததையடுத்து, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் பிரபாகரன், விழுப்புரம் தாலுகா போலீஸாருக்கு தகவல் அளித்தாா். அங்கு வந்த போலீஸாா் அந்த இளைஞரிடமும், அவரது தந்தையிடமும் விசாரித்தனா்.

விசாரணையில், அவா் செஞ்சி அருகேயுள்ள களையூரைச் சோ்ந்த வெங்கடேசன் மகன் குமரேசன் (28) என்பதும், பட்டதாரியான அவா், சென்னையில் வெல்டராகப் பணியாற்றிய போது, அங்கு அறிமுகமான ஏழுமலையிடம் ரூ.2 லட்சம் கொடுத்து போலியாக பணி நியமன ஆணை பெற்றதும் தெரிய வந்தது.

இதையடுத்து, குமரேசனைக் கைது செய்த போலீஸாா், தொடா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.