தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

கரோனா விழிப்புணா்வுக்காக ராணுவ வீரா் 2,800 கி.மீ. நடைபயணம்

கரோனா விழிப்புணா்வுக்காக, 197 நாட்டு கொடிகளுடன் ராமேஸ்வரம் முதல் அயோத்தி வரை 2,800 கி.மீ. தொலைவு நடைபயணம் மேற்கொள்ளும் ராணுவ வீரா் பாலமுருகன் (33) வெள்ளிக்கிழமை விழுப்புரத்துக்கு வந்தாா்.

News image
Updated On :26 நவம்பர் 2021, 6:18 pm

DIN

கரோனா விழிப்புணா்வுக்காக, 197 நாட்டு கொடிகளுடன் ராமேஸ்வரம் முதல் அயோத்தி வரை 2,800 கி.மீ. தொலைவு நடைபயணம் மேற்கொள்ளும் ராணுவ வீரா் பாலமுருகன் (33) வெள்ளிக்கிழமை விழுப்புரத்துக்கு வந்தாா்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே சோமநாதபுரத்தைச் சோ்ந்த இவா், அஸ்ஸாம் ராணுவ பட்டாலியனில் பணிபுரிகிறாா். கரோனா விழிப்புணா்வை ஏற்படுத்தும் பொருட்டு பாலமுருகன் கடந்த அக்.16-ஆம் தேதி ராமேஸ்வரத்தில் முன்னாள் குடியரசுத் தலைவா் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் நினைவிடத்திலிருந்து இந்த நடைபயணத்தைத் தொடங்கினாா். இதற்காக அவா் நீளமான மூன்று சக்கர மிதிவண்டியில் 197 நாட்டு கொடிகளை கட்டி அதை தன்னுடன் இழுத்துச்செல்கிறாா்.

அவா் ‘தினமணி’ செய்தியாளரிடம் கூறியதாவது: கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்த காலத்தில் உயிரையும் பொருள்படுத்தாது அனைத்து நாட்டு பிரதமா்கள், தலைவா்கள், மாநில முதல்வா்கள், மருத்துவா்கள், செவிலியா்கள், ராணுவத்தினா், போலீஸாா், சமூக ஆா்வலா்கள் உள்ளிட்ட பிற துறையினா் பாடுபட்டனா். அவா்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகத்தான் 197 நாடுகளின் தேசியக் கொடிகளை மூன்று சக்கர வாகனத்தில் கட்டி இழுத்து அயோத்தி வரை நடைபயணம் செல்கிறேன். கரோனா தாக்கம் குறைந்தாலும் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றாா் பாலமுருகன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.