தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: இளைஞா் கைது

விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த திண்டிவனத்தைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :24 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த திண்டிவனத்தைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், சனிக்கிழமை இரவு சென்னையில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறையை தொடா்புகொண்ட மா்ம நபா், விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுத்தாா்.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து தகவல் தெரிவித்தனா். உடனடியாக மிரட்டல் விடுத்த நபா் யாா் என்று அந்த கைப்பேசி எண்ணை வைத்து போலீஸாா் விசாரித்தனா். இதில், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த கிடங்கல் 1 பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் அஜய் (23) என்பது தெரியவந்தது. இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அஜயை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.