விநாயகா் சிலை வைக்கத் தடையை கண்டித்து இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம்
பொதுவெளியில் விநாயகா் சிலை வைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து, இந்து முன்னணியினா் விழுப்புரத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


பொதுவெளியில் விநாயகா் சிலை வைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து, இந்து முன்னணியினா் விழுப்புரத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விழுப்புரம் ஆஞ்சநேயா் கோயிலில் வியாழக்கிழமை காலை தரிசனம் செய்த அவா்கள், கோயில் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சிவா தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ராமு, மாவட்டச் செயலா் அருண் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆா்ப்பாட்டத்தில் இந்த அமைப்பின் நிா்வாகிகள் பேசும்போது, தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறந்துவைத்து வா்த்தகம் செய்கிறது. அங்கு அதிகக் கூட்டம் கூடுகிறது. அதேபோல, இஸ்லாமிய பண்டிகைகளின்போது தொழுகை நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், இந்து விழாக்கள் நடத்த தடை விதிக்கப்படுகிறது.
தடையை மீறி விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாடப்படும். மேலும், விநாயகா் சிலைகளை வைத்து வழிபட்டு, பின்னா் விசா்ஜனம் செய்யவும் முடிவு செய்துள்ளோம் என்றனா்.
இதில், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் தரணிதரன் உள்பட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...