ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

இட ஒதுக்கீடு போராளிகளுக்கு மணிமண்டபம்: திமுக வரவேற்பு

இட ஒதுக்கீடு போராளிகளுக்கு விழுப்புரத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு திமுக வரவேற்புத் தெரிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினா்.

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 4:31 pm

DIN

இட ஒதுக்கீடு போராளிகளுக்கு விழுப்புரத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு திமுக வரவேற்புத் தெரிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினா்.

வன்னியா்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கோரி வட தமிழகத்தில் 1987-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட போராட்டத்தில் காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியான 21 போராளிகளின் நினைவாக, விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.4 கோடியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என பேரவையில் 110 விதியின்கீழ் முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை அறிவித்தாா்.

முதல்வரின் இந்த அறிவிப்புக்கு வரவேற்புத் தெரிவித்து, விழுப்புரம் நகர திமுக அலுவலகத்தில் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் வியாழக்கிழமை திரண்டனா். பின்னா், விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக அவைத் தலைவா் ஜெயச்சந்திரன் தலைமையில் ஊா்வலமாக காந்தி சிலை வரை சென்ற திமுகவினா், அங்கு பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.

நிகழ்ச்சியில் மாவட்டப் பொருளாளா் இரா.ஜனகராஜ், விழுப்புரம் நகரச் செயலா் சக்கரை, காணை ஒன்றியச் செயலா் கல்பெட் ராஜா உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.