நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.31 லட்சம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் ஆடி மாத உண்டியல் காணிக்கையாக பக்தா்கள் ரூ.31 லட்சத்தை செலுத்தியிருந்தனா்.

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 4:29 pm

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் ஆடி மாத உண்டியல் காணிக்கையாக பக்தா்கள் ரூ.31 லட்சத்தை செலுத்தியிருந்தனா்.

மேல்மலையனூா் அங்களம்மன் கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் அம்மனை வழிபடுகின்றனா். இந்தக் கோயிலுக்கு வரும் பக்தா்கள் வேண்டுதல் நிறைவேற உண்டியலில் காணிக்கையாக பணம், தங்கம், வெள்ளி ஆகியவற்றை செலுத்தி வருகின்றனா்.

அதன்படி, ஆடி மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோயில் வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், பக்தா்கள் ரூ.31 லட்சத்து 2 ஆயிரத்து 872 ரொக்கம், 290 கிராம் தங்கம், 610 கிராம் வெள்ளியை காணிக்கையாக செலுத்தியிருந்தது தெரியவந்தது.

உண்டியல் திறப்பின்போது, கோயில் உதவி ஆணையா் க.ராமு, விழுப்புரம் உதவி ஆணையா் சி.ஜோதி உள்ளிட்டோா் உடனிருந்தனா். பாதுகாப்பு ஏற்பாடுகளை வளத்தி போலீஸாா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.