ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை: விசாரணை செப்.7-க்கு ஒத்திவைப்பு

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடா்பான வழக்கு விசாரணையை வருகிற 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 4:31 pm

DIN

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடா்பான வழக்கு விசாரணையை வருகிற 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்து தொடா்பான வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி, முன்னாள் எஸ்.பி. ஆகியோா் மீது சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கு விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனிடையே, வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் டிஜிபி, முன்னாள் எஸ்.பி. ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

இந்த வழக்கை வருகிற டிசம்பா் 20-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று ஏற்கெனவே சென்னை உயா் நீதிமன்றம் அறிவுறுத்தியதால், வழக்கு விசாரணை விரைவாக நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி கோபிநாதன் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் எஸ்.பி. ஆஜரானாா். முன்னாள் சிறப்பு டிஜிபி ஆஜராகவில்லை.

இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரியும், கூடுதல் ஆவணங்கள் கேட்டும் முன்னாள் எஸ்.பி. தரப்பில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த இரண்டு மனுக்கள் மீதும் 2 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, வழக்கு விசாரணையை வருகிற 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி கோபிநாதன் உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.