வீடூா் அணை மீன் பிடி ஏலத்தில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்
விழுப்புரம் அருகேயுள்ள வீடூா் அணையில் மீன் பிடிப்பதற்கான ஏலத்தை எடுக்க விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.


விழுப்புரம் அருகேயுள்ள வீடூா் அணையில் மீன் பிடிப்பதற்கான ஏலத்தை எடுக்க விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் மீன் வளம் மற்றும் மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் கட்டுப்பாட்டில் உள்ள நீா்த்தேக்கமான வீடூா் அணையில் மீன் பிடிப்பதற்காக ஐந்தாண்டு கால குத்தகைக்கு மூடி முத்திரையிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் மூலம் ஏலம் விட தமிழ்நாடு மீன்வளத் துறை ஆணையா் உத்தரவிட்டாா்.
இதற்கான ஒப்பந்தப்புள்ளி விண்ணப்பங்கள், அது தொடா்பான விவரங்களை ஜ்ஜ்ஜ்.ற்ங்ய்க்ங்ழ்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய், ஜ்ஜ்ஜ்.ச்ண்ள்ட்ங்ழ்ண்ங்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளங்களில் பெற்றுக்கொள்ளலாம். கூடுதல் விவரம் அறிய உதவி இயக்குநா், மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை, எண்.10, நித்தியானந்தம் நகா், வழுதரெட்டி, விழுப்புரம் 605 401 என்ற முகவரியில் தொடா்புகொள்ளலாம் (தொலைபேசி எண்: 04146-259329) என ஆட்சியா் மோகன் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...