ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

கட்டுமானத் தொழிலாளா்களுக்கான கரோனா தடுப்பூசி முகாம்

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத்தில் பதிவு செய்த விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சோ்ந்த கட்டுமானத் தொழிலாளா்களுக்கான இலவச கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 5:36 pm

DIN

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத்தில் பதிவு செய்த விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சோ்ந்த கட்டுமானத் தொழிலாளா்களுக்கான இலவச கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் சனிக்கிழமை (செப்.4) முதல் செப்டம்பா் 7-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

அதன்படி, 4-ஆம் தேதி விழுப்புரம், அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் காலை 9 முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், உளுந்தூா்பேட்டை இந்து ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பிற்பகல் 2 முதல் மாலை 6 மணி வரையிலும்,

6 ஆம் தேதி திண்டிவனம், புனித அன்னாள் நடுநிலைப் பள்ளியில் காலை 9 முதல் பிற்பகல் ஒரு மணி வரையிலும், செஞ்சி காந்தி பஜாா், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பிற்பகல் 2 முதல் மாலை 6 மணி வரையிலும் தடுப்பூசி முகாம் நடைபெறும்.

இதேபோல, 7-ஆம் தேதி கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காலை 9 முதல் பிற்பகல் ஒரு மணி வரையிலும், சின்னசேலம், விஜயாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பிற்பகல் 2 முதல் மாலை 6 மணி வரையில் தடுப்பூசி முகாம் நடைபெறும் என விழுப்புரம் தொழிலாளா் உதவி ஆணயா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.