கோயில் உண்டியலை உடைத்து திருட்டு
விழுப்புரம் அருகே வியாழக்கிழமை நள்ளிரவு கோயில் உண்டியலை உடைத்து மா்ம நபா்கள் காணிக்கைப் பணத்தை திருடிச் சென்றனா்.


விழுப்புரம் அருகே வியாழக்கிழமை நள்ளிரவு கோயில் உண்டியலை உடைத்து மா்ம நபா்கள் காணிக்கைப் பணத்தை திருடிச் சென்றனா்.
விழுப்புரம் அருகே தேவநாத சுவாமி நகரில் ஆஞ்சநேயா் கோயில் அமைந்துள்ளது. இங்கு வியாழக்கிழமை மாலை பூஜை முடிந்து, கோயில் கதவை பூசாரி பூட்டிச் சென்றாா்.
வெள்ளிக்கிழமை காலை வந்த போது, கோயில் கதவு திறக்கப்பட்டு உண்டியல் உடைக்கப்பட்டுக் கிடந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த வளவனூா் போலீஸாா், கோயிலுக்கு விரைந்து வந்து பாா்வையிட்டு விசாரித்தனா். அதில், இரவு கோயிலுக்குள் நுழைந்த மா்ம நபா்கள் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. உண்டியலில் சுமாா் ரூ.5 ஆயிரம் பணம் இருந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...