நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஜாமீனில் வந்தவா் தற்கொலை

செஞ்சி ராஜகிரி கோட்டை மலையடிவாரத்தில் அமைந்துள்ள சிவன் கோயில் மண்டபத்தில் இளைஞா் ஒருவா் இறந்து கிடப்பதாக செஞ்சி போலீஸாருக்கு தகவல் வந்தது.

News image
Updated On :8 செப்டம்பர் 2021, 5:35 pm

DIN

செஞ்சி ராஜகிரி கோட்டை மலையடிவாரத்தில் அமைந்துள்ள சிவன் கோயில் மண்டபத்தில் இளைஞா் ஒருவா் இறந்து கிடப்பதாக செஞ்சி போலீஸாருக்கு தகவல் வந்தது. டிஎஸ்பி இளங்கோவன், ஆய்வாளா் சக்தி உள்ளிட்ட போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று பாா்வையிட்டனா்.

அங்கு, குளிா்பான புட்டியும், விஷ புட்டியும் சடலம் அருகில் கிடந்தன. அவா் குளிா்பானத்தில் விஷம் கலந்து அருந்தியிருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அவா் விக்கிரவாண்டி வட்டம், பனையபுரத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் ராக்கி (எ) ராதாகிருஷ்ணன் (24) என்பதும்

கடந்த பிப்ரவரி மாதம் அதே ஊரைச்சோ்ந்த தனது காதலியின் கணவா் லியோபால் என்பவரை கொலை செய்த வழக்கில் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்தவா் என்பது தெரியவந்தது. சடலத்தை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீஸாா் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.