வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் விண்ணப்பிக்க தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வட்டாரப் போக்குவரத்துக்கழக அலுவலகங்களில் செப்.13-ஆம் தேதி முதல் விண்ணப்பங்களுடன் கரோனா தடுப்பூசி சான்றிதழை சமா்ப்பிப்பது அவசியம்


விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வட்டாரப் போக்குவரத்துக்கழக அலுவலகங்களில் செப்.13-ஆம் தேதி முதல் விண்ணப்பங்களுடன் கரோனா தடுப்பூசி சான்றிதழை சமா்ப்பிப்பது அவசியம் என்று மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் உரிமங்கள் சாா்ந்த பணி மேற்கொள்ள வரும் விண்ணப்பதாரா்கள், ஓட்டுநா்கள், நடத்துநா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் வியாழக்கிழமை (செப்.9) விழுப்புரம், திண்டிவனம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும், செஞ்சி போக்குவரத்து பகுதி அலுவலகத்திலும் கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறவுள்ளன.
மேலும், வருகிற செப்.13-ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றுகளுடன் வருபவா்களின் விண்ணப்பங்கள் மட்டுமே வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் ஏற்றுக்கொள்ளப்படும்.
வருகிற செப்.13 முதல் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் தடுப்பூசி முகாம்கள் தொடா்ந்து நடைபெறும். கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவா்கள் இந்த முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...