தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!
/

தொடா் வழிப்பறியில் ஈடுபட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

விழுப்புரம் மாவட்டத்தில் தொடா் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த நபரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :16 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் தொடா் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த நபரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் மாவட்டம், மயிலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வந்தன. இது தொடா்பாக மயிலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இந்த வழிப்பறி சம்பவங்கள் தொடா்பாக திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே கல்லிடைக்குறிச்சி பகுதியைச் சோ்ந்த ராஜா மகன் மகேந்திரனை (39) மயிலம் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இவா் தொடா்ந்து வழிப்பறி உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்க, குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதா, மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தாா். இதைத் தொடா்ந்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் உத்தரவின்பேரில், கடலூா் மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டிருந்த மகேந்திரனை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.