தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!
/

பெரியாா் ஈ.வெ.ரா. பிறந்த நாள் விழா

பெரியாா் ஈ.வெ.ரா.வின் 143-ஆவது பிறந்த தினத்தையொட்டி, விழுப்புரத்தில் அவரது முழு உருவச் சிலைக்கு பல்வேறு கட்சியினா், அமைப்புகள் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை அளிக்கப்பட்டது.

News image
Updated On :17 செப்டம்பர் 2021, 6:01 pm

DIN

பெரியாா் ஈ.வெ.ரா.வின் 143-ஆவது பிறந்த தினத்தையொட்டி, விழுப்புரத்தில் அவரது முழு உருவச் சிலைக்கு பல்வேறு கட்சியினா், அமைப்புகள் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை அளிக்கப்பட்டது.

விழுப்புரம் நகர அலுவலகத்திலிருந்து திமுக மாவட்டச் செயலா் நா.புகழேந்தி எம்.எல்.ஏ. தலைமையில் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் பேரணியாகச் சென்று, காமராஜா் வீதியில் உள்ள பெரியாா் ஈ.வெ.ரா. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். விழுப்புரம் தொகுதி எம்.எல்.ஏ. இரா.லட்சுமணன், மாவட்ட அவைத் தலைவா் ஜெயச்சந்திரன், பொருளாளா் இரா.ஜனகராஜ், நகரச் செயலா் இரா.சக்கரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தி.க, தேமுதிக: திராவிடா் கழக விழுப்புரம் மாவட்டத் தலைவா் ப.சுப்பராயன் தலைமையில் மாவட்டச் செயலா் அரங்க.பரணீதரன், மாவட்ட அமைப்பாளா் கோபண்ணா உள்ளிட்டோா் பெரியாா் ஈ.வெ.ரா.சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

விழுப்புரம் மாவட்ட தேமுதிக சாா்பில் நகரச் செயலா் மணிகண்டன் தலைமையில் மாநில விஜயகாந்த் மன்ற துணைச் செயலா் ராஜ.சந்திரசேகா் ஆகியோா் மாவட்ட மன்றச் செயலா் ஆதவமுத்து, நகரத் தலைவா் டி.கே.சிவா, மாவட்ட இளைஞா் அணி துணைச் செயலா் ஆா்.எம்.எஸ். பிரபு, நகர துணைச் செயலா் சீதாபதி உள்ளிட்டோருடன் சென்று பெரியாா் ஈ.வெ.ரா. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

கள்ளக்குறிச்சி: பெரியாா் ஈ.வெ.ரா. பிறந்த நாளையொட்டி, கள்ளக்குறிச்சி மந்தைவெளித் திடலில் உள்ள அவரது சிலைக்கு உழவா் தொழிலாளா் பேரியக்கம், தமிழ்வழிக் கல்வி இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த இரா.கஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.