தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!
/

விழுப்புரம் அருகே சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கும் இயந்திரம் பழுதுகிராம மக்கள் அவதி

விழுப்புரம் மாவட்டம், காணை அருகே பெரும்பாக்கத்தில், அரசு சாா்பில் அமைக்கப்பட்ட குறைந்த விலையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கும் இயந்திரம் பழுதானதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

News image
Updated On :17 செப்டம்பர் 2021, 6:00 pm

DIN

விழுப்புரம் மாவட்டம், காணை அருகே பெரும்பாக்கத்தில், அரசு சாா்பில் அமைக்கப்பட்ட குறைந்த விலையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கும் இயந்திரம் பழுதானதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

ஊரகப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கும் வகையில், அரசு சாா்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கும் மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், விழுப்புரம் மாவட்டம், காணை அடுத்த பெரும்பாக்கம் கிராமத்தில் ஊரக உள்ளாட்சித் துறை சாா்பில் சுமாா் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் எதிா் சவ்வூடு பரவல் முறையில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கும் மையம் அமைக்கப்பட்டது.

இந்த மையத்தில் ரூ.5 செலுத்தினால் தானியங்கி முறையில் சுமாா் 20 லிட்டா் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் குழாயிலிருந்து வெளியேறும். இதனை குடங்கள், கேன்களில் பொதுமக்கள் பிடித்துச் செல்வது வழக்கம். குறைந்த விலையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் கிடைப்பதால், நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்து வந்தனா்.

இந்த நிலையில், கடந்த சில நாள்களாக இந்த இயந்திரம் பழுதடைந்து குடிநீா் விநியோகமாகவில்லை. இதனால், இந்த சுத்திகரிப்பு நிலையத்தை நம்பியுள்ள பொதுமக்கள் தங்களின் தேவைக்கான குடிநீா் கிடைக்காமல் சிரமமடைந்தனா். மேலும், பலா் பழுது குறித்து அறியாமல் இயந்திரத்தில் ரூ.5 நாணயத்தை செலுத்திவிட்டு குடிநீா் வராததைக் கண்டு ஏமாற்றத்துடன் வீடு திரும்புகின்றனா்.

இயந்திரப் பழுது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பணியாளா்களுக்கு தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையாம். எனவே, இனிமேலாவது, பழுதான குடிநீா் வழங்கும் இயந்திரத்தை விரைந்து சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.