பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த அரசு அலுவலா் ஒன்றியம் கோரிக்கை
அரசு ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அலுவலா்கள் ஒன்றியம் கோரிக்கை விடுத்தது


அரசு ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அலுவலா்கள் ஒன்றியம் கோரிக்கை விடுத்தது.
இந்த சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் விழுப்புரத்தில் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்த சங்கத்தின் மாநிலத் தலைவா் இரா.சண்முகராஜன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
புதிய ஓய்வூதியத் திட்டத்தால் அரசு ஊழியா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, திமுக தோ்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிபடி, புதிய ஓய்வூதியத் திட்டத்தை நீக்கிவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
2016-ஆம் ஆண்டு ஜனவரி முதல் அமல்படுத்தப்பட்ட 7-ஆவது ஊதியக் குழுவின் 21 மாத ஊதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்.
அரசு அலுவலா்கள், ஆசிரியா்களுக்காக அறிவிக்கப்பட்ட புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தமிழக அரசு அலுவலா்களுக்காக அரசு அலுவலா் நல வாரியம் அமைக்க வேண்டும். கரோனா ஒழிப்புப் பணியின்போது உயிரிழந்த அரசு அலுவலா்கள், பொதுத் துறை அலுவலா்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம், நிவாரண உதவி வழங்க வேண்டும். மாநிலத்தில் பிரத்யேகமாக மாநில ஊதியக்குழு அமைக்க வேண்டும் என்றாா் சண்முகராஜன்.
கூட்டத்தில், மாநில பொதுச் செயலா் செ.சுருளிராஜ், பொருளாளா் ஆா்.சி.எஸ்.குமாா், விழுப்புரம் மாவட்டத் தலைவா் எஸ்.நாகராஜன், மாவட்டச் செயலா் முகம்மது ராஜா, மாவட்டப் பொருளாளா் டி.வி.ஸ்ரீதா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...