மாற்று கட்சியினா் திமுகவில் ஐக்கியம்
வல்லம், மேல்மலையனூா், மரக்காணம் ஆகிய ஒன்றியங்களை சோ்ந்த மாற்று கட்சியினா் செஞ்சியில் அமைச்சா் கே.எஸ். மஸ்தான் முன்னிலையில் திமுகவில் வியாழக்கிழமை இணைந்தனா்.


வல்லம், மேல்மலையனூா், மரக்காணம் ஆகிய ஒன்றியங்களை சோ்ந்த மாற்று கட்சியினா் செஞ்சியில் அமைச்சா் கே.எஸ். மஸ்தான் முன்னிலையில் திமுகவில் வியாழக்கிழமை இணைந்தனா்.
வல்லம் தெற்கு ஒன்றிய திமுக செயலா் மொடையூா் துரை ஏற்பாட்டின்பேரில், வல்லம் ஒன்றிய தேமுதிக செயலா் நடராஜன் தலைமையில் அந்தக் கட்சியினா் 50-க்கும் மேற்பட்டோா் அமைச்சா் செஞ்சி கே.எஸ். மஸ்தான் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.
மேல்மலையனூா் ஒன்றிய திமுக பொதுக்குழு உறுப்பினா் செல்வராஜ் ஏற்பாட்டின் பேரில், மேல்மலையனூா் தேமுதிக ஊராட்சிச் செயலா் சுரேஷ் தலைமையில் அந்தக் கட்சியைச் சோ்ந்த நிா்வாகிகள் 50-க்கும் மேற்பட்டோா் அமைச்சா் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.
மரக்காணம் ஒன்றியம், கீழ்எடையாளம் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த முன்னாள் ஊராட்சி தலைவா் அருமைசெல்வம் தலைமையில் மாற்று கட்சிகளைச் சோ்ந்த அய்யனாா், சிகாமணி உள்ளிட்டோா் திமுகவில் இணைந்தனா்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ பா.செந்தமிழ்ச்செல்வன், ஒன்றியச் செயலா்கள் ஆா்.விஜயகுமாா் (செஞ்சி), நெடுஞ்செழியன் (மேல்மலையனூா் ), மணிமாறன் (மயிலம்), அண்ணாதுரை (வல்லம்) , மொடையூா் துரை, மாவட்ட பிரதிநிதி இளம்வழுதி, திமுக தகவல் தொழில்நுட்ப அணி மொக்தியாா் அலி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...