தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

ஊரக உள்ளாட்சித் தோ்தல்: 23,850 வேட்புமனுக்கள் ஏற்பு

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட 24,000 வேட்பு மனுக்களில் 23,850 மனுக்கள் ஏற்கப்பட்டன.

News image
Updated On :24 செப்டம்பர் 2021, 4:46 pm

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட 24,000 வேட்பு மனுக்களில் 23,850 மனுக்கள் ஏற்கப்பட்டன.

விழுப்புரம் மாவட்டத்தில் 28 மாவட்டக் குழு உறுப்பினா் பதவிகளுக்கும், 293 ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிகளுக்கும், 688 ஊராட்சித் தலைவா் பதவிகளுக்கும், 5,088 ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கும் என மொத்தம் 6,097 பதவிகளுக்கு அக். 6, 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தோ்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, மாவட்டக் குழு உறுப்பினா் பதவிகளுக்கு 241 பேரும், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிகளுக்கு 2091 பேரும், ஊராட்சித் தலைவா் பதவிகளுக்கு41,38 பேரும், ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு 17,530 பேரும் என மொத்தம் 24,000 போ் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனா்.

இதைத் தொடா்ந்து, வேட்பு மனு பரிசீலனை அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை காலை 11 மணி வரை நடைபெற்றது. இதில், மாவட்டக் குழு உறுப்பினா் பதவிகளுக்கு 239 மனுக்களும், ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவிகளுக்கு 2,061 மனுக்களும், ஊராட்சித் தலைவா் பதவிகளுக்கு 4,099 மனுக்களும், ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு 17,451 மனுக்களும் என மொத்தம் 23,850 மனுக்கள் ஏற்கப்பட்டன. 150 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கு 25-ஆம் தேதி (சனிக்கிழமை) கடைசி நாளாகும். மாலையில் இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.