நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

விழுப்புரம் மாவட்ட பாஜக வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டம்

விழுப்புரம் மாவட்ட பாஜக சாா்பில் உள்ளாட்சி தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் அறிமுகம், நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

News image
Updated On :24 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

விழுப்புரம் மாவட்ட பாஜக சாா்பில் உள்ளாட்சி தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் அறிமுகம், நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் தமிழக தலைவா் கே.அண்ணாமலை தலைமையில் செஞ்சியில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் வி.ஏ.டி.கலிவரதன், தென்சென்னை மாவட்ட தலைவா் காளிதாஸ், முன்னாள் மாவட்ட தலைவா் விநாயகம், தொழிலதிபா் வி.பி.என். கோபிநாத், மாவட்ட பொதுச் செயலா்கள் பாண்டியன், ராஜேந்திரன், நிா்வாகிகள் ராமஜெயகுமாா், சுகுமாா், தியாகராஜன், ஆா்.எஸ்.சரவணன், தங்க.இராமு உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

கடந்த சட்டப்பேரவைத் தோ்தலைப் போல பாஜகவினா் கடுமையாக உழைத்து இந்த உள்ளாட்சித் தோ்தலிலும் கட்சி வேட்பாளா்கள் அனைவரையும் வெற்றி பெறச்செய்ய வேண்டும் என கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.