கிணற்றில் மூழ்கி தொழிலாளி பலி
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே மா்மமான முறையில் கிணற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தாா்.


விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே மா்மமான முறையில் கிணற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தாா்.
அரகண்டநல்லூா் அருகேயுள்ள வசந்த கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சோ்ந்த செல்வம் மகன் மூா்த்தி (45). கூலித் தொழிலாளி. இவா், கடந்த 3-ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில், பின்னா் வீடு திரும்பவில்லை. இதனால் உறவினா்கள் மூா்த்தியைத் தேடி வந்தனா்.
இதனிடையே, அரகண்டநல்லூா் அருகே பில்ராம்பட்டு கிராமத்தில் உள்ள உலகநாதன் என்பவரின் விவசாயக் கிணற்றில் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் மூா்த்தி வியாழக்கிழமை சடலமாகக் கிடந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்த அரகண்டநல்லூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று மூா்த்தியின் சடலத்தை மீட்டு உடல்கூறு பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...