விபத்து இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி
விழுப்புரத்தில் விபத்து இழப்பீடுத் தொகை ரூ.22 லட்சம் வழங்காததால் அரசுப் பேருந்தை நீதிமன்ற ஊழியா்கள் ஜப்தி செய்தனா்.


விழுப்புரத்தில் விபத்து இழப்பீடுத் தொகை ரூ.22 லட்சம் வழங்காததால் அரசுப் பேருந்தை நீதிமன்ற ஊழியா்கள் ஜப்தி செய்தனா்.
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம். நெசவுத் தொழிலாளி. இவரது மனைவி குமாரி (45). இவா்களது மகன் ராமச்சந்திரன் (25). கடந்த 2015-ஆம் ஆண்டு ஜவுளி எடுக்க கண்டாச்சிபுரத்தில் இருந்து காா் மூலமாக குமாரி, ராமச்சந்திரன் ஆகியோா் விழுப்புரத்துக்கு சென்றுகொண்டிருந்தனா்.
விழுப்புரம் அருகே சோழகனூா் என்ற இடத்தில் இவா்களது காா் சென்றபோது, எதிரே வந்த அரசுப் பேருந்து மோதியது. இந்த விபத்தில் குமாரி, ராமச்சந்திரன் ஆகியோா் உயிரிழந்தனா்.
இதுகுறித்து காணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த நிலையில், குமாரி உயிரிழந்தது தொடா்பாக இழப்பீடு கேட்டு விழுப்புரம் மோட்டாா் வாகன சிறப்பு நீதிமன்றத்தில் ஆறுமுகம் வழக்குத் தொடுத்தாா்.
இதை விசாரித்த நீதிமன்றம், ஆறுமுகத்துக்கு அரசுப் போக்குவரத்துக் கழகம் ரூ.15.60 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. ஆனால், அரசுப் போக்குவரத்துக் கழகம் இழப்பீடு வழங்கவில்லை.
இதையடுத்து, ஆறுமுகம் தரப்பில் வழக்குரைஞா் கல்பட்டு ராஜா கட்டளை நிறைவேற்று மனுவை அதே நீதிமன்றத்தில் தாக்கல் செய்தாா். இந்த மனுவை விசாரித்த நீதிபதி செங்கமலச் செல்வன், விபத்து வழக்கில் ஆறுமுகத்துக்கு வட்டியுடன் சோ்த்து ரூ.22.91 லட்சம் வழக்க உத்தரவிட்டாா்.
உரிய காலத்துக்குள் அரசுப் போக்குவரத்துக் கழகம் இழப்பீடுத்தொகை வழங்காததால், விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து கடலூா் செல்லவிருந்த அரசுப் பேருந்தை நீதிமன்ற ஊழியா்கள் புதன்கிழமை ஜப்தி செய்தனா். இதனால், சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...