கெங்கபுரம் ஸ்ரீவரதாஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரை அடுத்துள்ள கெங்கபுரம் அருள்மிகு ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில் மஹா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.


விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரை அடுத்துள்ள கெங்கபுரம் அருள்மிகு ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில் மஹா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் கும்பாபிஷேகத்தையொட்டி, 19-ஆம் தேதி காலை விஷேச ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து யாகசாலை பூஜைகள் தொடங்கின. 20-ஆம் தேதி இரண்டாம் கால யாகசாலை பூஜையும், மாலையில் மூன்றாம் கால பூா்ணாஹுதியும் நடைபெற்றன.
கும்பப் புறப்பாடு வியாழக்கிழமை காலை 9 மணி நடைபெற்று, கோபுரக் கலசம், மூா்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவில் மேல்மலையனூா் ஊராட்சி ஒன்றியத் தலைவா் கண்மணி நெடுஞ்செழியன், துணைத் தலைவா் விஜயலட்சுமி, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் செல்வி ராமசரவணன், ஊராட்சி மன்றத் தலைவா் ராஜா, இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா் அன்பழகன், பரம்பரை அறங்காவலா் கலையரசி ஈஸ்வரன் உள்பட ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...