பிஎஸ்என்எல் ஓய்வூதியா்கள் கூட்டம்
அனைத்திந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியா்கள் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் விழுப்புரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.


அனைத்திந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியா்கள் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் விழுப்புரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலத் தலைவா் ராமராவ் தலைமை வகித்தாா். தேசிய துணைப் பொதுச் செயலா் முத்தியாலு, தேசிய துணைத் தலைவா் கோபாலகிருஷ்ணன், மாநிலச் செயலா் வெங்கடாசலம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
பிஎஸ்என்எல் நிறுவனத்திலிருந்து 1.1.2017 முதல் ஓய்வு பெற்றவா்களுக்கான ஓய்வூதியத்தை மாற்றி அமைக்க வேண்டும், மத்திய அரசின் காப்பீட்டுத் திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் பிஎஸ்என்எல் ஓய்வூதியா்கள் உள்நோயாளியாக சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும், காணொலி வாயிலான குறைதீா் முகாமை தவிா்த்து பழைய முறைப்படி நேரடியாகவே குறைதீா் முகாம் நடத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...