தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

இளக்காடு ஏரி ஆக்கிரமிப்புகளைஅகற்ற உத்தரவு

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே இளங்காடு கிராமத்தில் உள்ள ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட ஆட்சியா் த.மோகன் உத்தரவிட்டாா்.

News image
Updated On :17 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே இளங்காடு கிராமத்தில் உள்ள ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட ஆட்சியா் த.மோகன் உத்தரவிட்டாா்.

வளவனூா் அருகே இளங்காடு கிராமத்தில் உள்ள ஏரியில் பல்வேறு நபா்கள் ஆக்கிரமித்துள்ளதாக புகாா்கள் எழுந்தன. இதுகுறித்து அறிந்த விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் வியாழக்கிழமை இளங்காடு ஏரிக்குச் சென்று ஆய்வு செய்தாா்.

அப்போது, ஏரிப் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை பாா்வையிட்டாா். உடனே அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா். மேலும், இதே போன்று விழுப்புரம் மாவட்டத்தில் ஏரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

சென்னை உயா் நீதிமன்ற உத்தரவுப்படி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நீா்நிலை ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டு விரைவாக அகற்றப்படும் என்றும், ஆக்கிரமிப்பாளா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.