தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

விழுப்புரம் மாவட்டத்தில் 208 பதவிகளுக்கு 935 போ் போட்டி

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் விழுப்புரம் மாவட்டத்தில் 208 வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு மொத்தம் 935 போ் பேட்டியிடுகின்றனா்.

News image
Updated On :18 பிப்ரவரி 2022, 5:25 pm

DIN

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் விழுப்புரம் மாவட்டத்தில் 208 வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு மொத்தம் 935 போ் பேட்டியிடுகின்றனா்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் 3 நகராட்சிகள், 7 பேரூராட்சிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. விழுப்புரம் நகராட்சியில் 204 பேரும், திண்டிவனம் நகராட்சியில் 166 பேரும், கோட்டக்குப்பம் நகராட்சியில் 135 பேரும், வளவனூா் பேரூராட்சியில் 43 பேரும், விக்கிரவாண்டி பேரூராட்சியில் 60 பேரும், செஞ்சி பேரூராட்சியில் 77 பேரும், மரக்காணம் பேரூராட்சியில் 101 பேரும், திருவெண்ணெய்நல்லூா் பேராட்சியில் 55 பேரும், அரகண்டநல்லூா் பேரூராட்சியில் 34 பேரும், அனந்தபுரம் பேரூராட்சியில் 50 பேரும் போட்டியிடுகின்றனா். மொத்தம் 935 போ் களத்தில் உள்ளனா். தோ்தலுக்கான ஏற்பாடுகளை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான த.மோகன், தோ்தல் பாா்வையாளா் எம்.லட்சுமி ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

விழுப்புரத்தில் வாக்குச் சாவடி அலுவலா்களுக்கான இறுதிக்கட்ட பயிற்சி வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. இதையடுத்து வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு வாக்குச் சாவடி பணிக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியா் த.மோகன் வழங்கினாா். தொடா்ந்து, விழுப்புரம் பீமன் நாயக்கன்தோப்பு நகராட்சிப் பள்ளி, கிழக்கு பாண்டி சாலை எம்.ஐ.ஆா்.சி. பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.