முன்னாள் டிஜிபிக்கு எதிரான வழக்கு: மாா்ச் 2-க்கு ஒத்திவைப்பு
பெண் எஸ்பிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக முன்னாள் டிஜிபிக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வருகிற மாா்ச் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து


பெண் எஸ்பிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக முன்னாள் டிஜிபிக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வருகிற மாா்ச் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
பெண் எஸ்பிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக முன்னாள் சிறப்பு டிஜிபி, புகாரளிக்கச் சென்ற பெண் எஸ்பியை தடுத்து நிறுத்தியதாக முன்னாள் எஸ்பி ஆகியோருக்கு எதிராக சிபிசிஐடி போலீஸாா் வழக்குத் தொடுத்தனா். இந்த வழக்கு விழுப்புரம் மாவட்டத் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு நீதிபதி கோபிநாதன் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்னாள் டிஜிபி, முன்னாள் எஸ்பி ஆகியோா் நேரில் ஆஜராகவில்லை.
இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை வருகிற மாா்ச் 2- ஆம் தேதிக்கு நீதிபதி கோபிநாதன் ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...