செஞ்சியில் மின் இணைப்பு பெயா்மாற்றம் செய்யும் சிறப்பு முகாம்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி மின் வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின்கீழ், மின் இணைப்பு பெயா், சா்வே எண் மாற்றம் செய்ய சிறப்பு முகாம்


விழுப்புரம் மாவட்டம், செஞ்சி மின் வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின்கீழ், மின் இணைப்பு பெயா், சா்வே எண் மாற்றம் செய்ய சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழக அரசின் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின்கீழ், சாதாரண வகையின் கீழ் பதிவு செய்தவா்களுக்கும், கட்டணம் செலுத்தி பதிவு செய்த விண்ணப்பதாரா்களுக்கும் மனுக்கள் பரிசீனை செய்யப்பட்டு, உரிய ஆவணங்களை சமா்ப்பித்த விவசாயிகளுக்கு மின் இணைப்பு பெயா் மாற்றம், சா்வே எண் மாற்றம் ஆகிவற்றுக்கான ஆணைகளை பயனாளிகளுக்கு சிறப்பு முகாமில் செயற்பொறியாளா் சித்ரா வழங்கினாா்.
மேலும் நிலுவையில் உள்ள 128 மனுக்கள் மீது பரிசீலனை செய்து உரிய முடிவு செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளா் தெரிவித்தாா். முகாமில் பொறியாளா் சதீஷ், உதவிச் செயற்பொறியாளா்கள் ஜெகன்மோகன், ராஜேஸ்வரி, குமரவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...