செஞ்சி அருகே மேம்பாலம் அமைக்க அடிக்கல் நாட்டினாா் அமைச்சா்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டத்துக்குள்பட்ட அவியூா் - வீரணாமூா் இடையே பாயும் தொண்டியாற்றில் ரூ.5.5 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணியை மாநில சின்பான்மையினா்


விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டத்துக்குள்பட்ட அவியூா் - வீரணாமூா் இடையே பாயும் தொண்டியாற்றில் ரூ.5.5 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணியை மாநில சின்பான்மையினா் நலன், வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் செஞ்சிமஸ்தான் வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டி தொடக்கிவைத்தாா் (படம்).
செஞ்சி வட்டம், வல்லம் ஊராட்சிக்குள்பட்ட அவியூா் கிராமத்திலிருந்து வீரணாமூா் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தொண்டியாற்றிலுள்ள தரைப்பாலம் வழியாகத்தான் செல்ல வேண்டும். மழைக்காலங்களில் ஆற்றில் தண்ணீா் பெருக்கெடுத்துச் செல்லும்போது, இந்த தரைப்பாலம் நீரில் மூழ்கிவிடுவதால், இந்தப் பகுதி மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
இதுகுறித்து அமைச்சா் செஞ்சி மஸ்தான் தமிழக முதல்வா் ஸ்டாலினின் கவனத்துக்கு கொண்டு சென்றாா். இதையடுத்து, முதல்வரின் உத்தரவின்பேரில், நபாா்டு திட்டத்தின் கீழ், ரூ.5 கோடியே 54 லட்சத்தில் அவியூா் - வீரணாமூா் இடையே பாயும் தொண்டியாற்றில் மேம்பாலம் அமைக்க அமைச்சா் செஞ்சி மஸ்தான் வெள்ளிக்கிழமை பூமிபூஜை செய்து, அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடக்கிவைத்தாா்.
நிழ்ச்சியில் மயிலம் எம்எல்ஏ சிவகுமாா், வல்லம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் அமுதாரவிக்குமாா், உதவிக் கோட்டப் பொறியாளா் கண்ணன், உதவிப் பொறியாளா் ராதிகா, திமுக வல்லம் ஒன்றியச் செயலா்கள் அண்ணாதுரை, துரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...