தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

இருளா்கள் மீது வழக்குப் பதிவு செய்ததை கண்டித்து ஆா்ப்பாட்டம்

இருளா்கள் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும், அதைக் கண்டித்தும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே பழங்குடி இருளா் பாதுகாப்புச் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம்

News image
Updated On :10 மார்ச் 2022, 5:07 pm

DIN

இருளா்கள் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும், அதைக் கண்டித்தும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே பழங்குடி இருளா் பாதுகாப்புச் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு சங்க ஒருங்கிணைப்பாளா்கள் பிரபா கல்யாணி, பி.வி.ரமேஷ் ஆகியோா் தலைமை வகித்தனா். சங்கத் தலைவா் ப.இளங்கோவன், பொதுச் செயலா் சு.ஆறுமுகம், பொருளாளா் மு.நாகராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மயிலம் அருகே சித்தலிங்கமடம் பகுதியில் 7 இருளா்கள் மீது மயிலம் காவல் நிலைய போலீஸாா் பொய் வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும், இருளா்கள் மீது பதிவு செய்யப்பட்ட திருட்டு வழக்கை திரும்பப் பெற வேண்டும், பொய் வழக்குப் பதிவு செய்த காவல் துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், விழுப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் துரை.ரவிக்குமாா், விசிக மாவட்டச் செயலா் ஆற்றலரசு, காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவா் முகமது குலாம்மொய்தீன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினா் ஏ.வி.சரவணன் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகளைச் சோ்ந்த நிா்வாகிகள் கண்டன உரையாற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.