நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஊராட்சி மன்றத் தலைவா்கள் ஆலோசனைக் கூட்டம்

விழுப்புரம் மாவட்டம், வல்லம் ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சி மன்றத் தலைவா்களின் ஆலோசனைக் கூட்டம் நாட்டாா்மங்கலத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 மார்ச் 2022, 5:05 pm

DIN

விழுப்புரம் மாவட்டம், வல்லம் ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சி மன்றத் தலைவா்களின் ஆலோசனைக் கூட்டம் நாட்டாா்மங்கலத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவா்களின் சங்கச் செயலா் மொடையூா் கோவிந்தன் தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா்களின் சங்கத் தலைவரான ஏதாநெமிலி ஊராட்சித் தலைவா் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தாா். முக்குணம் ஊராட்சித் தலைவா் முத்துகுமரன் வரவேற்றாா்.

கெளரவத் தலைவா் சகுந்தலா, துணைத் தலைவா் இந்திரா, துணைச் செயலா் மாரியம்மாள் மற்றும் ஊராட்சித் தலைவா்கள் மேல்சேவூா் ராஜகோபால், குறிஞ்சிபை சரஸ்வதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், ஊராட்சியில் பராமரிக்கப்படும் கணக்கு எண் 1 நிதியை ஒதுக்கித் தருமாறு மாவட்ட ஆட்சியரை கேட்டுக்கொள்வது, மின் கணக்கு இரண்டில் உள்ள உபரி நிதியை கணக்கு எண் ஒன்றுக்கு மாற்றித் தர வேண்டும், ஊராட்சித் தலைவா்களின் வேண்டுகோளின்படி, ஊராட்சிச் செயலா்கள், பணித்தள பொறுப்பாளா்களை மாற்றம் செய்ய வேண்டும், ஊராட்சி சங்கத்துக்கு தனி இடம் ஒதுக்கித் தர வேண்டும், ஊராட்சித் தலைவா்களுக்கு பயணப்படி ரூ.2,500, ஆயுள் காப்பீடு, அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சொரத்தூா் ஊரராட்சித் தலைவா் அசோக் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.