தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

மாா்ச் 21 முதல் குறைகேட்புக் கூட்டம்: விழுப்புரம் ஆட்சியா் அறிவிப்பு

 விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமைதோறும் நடைபெறும் குறைகேட்புக் கூட்டம் வருகிற 21-ஆம் தேதி முதல் மீண்டும் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியா் த.மோகன் அறிவித்தாா்.

News image
Updated On :17 மார்ச் 2022, 5:42 pm

DIN

 விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமைதோறும் நடைபெறும் குறைகேட்புக் கூட்டம் வருகிற 21-ஆம் தேதி முதல் மீண்டும் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியா் த.மோகன் அறிவித்தாா்.

பொதுமக்கள் கட்டாயம் தனி மனித இடைவெளியைப் பின்பற்றியும், முகக் கவசம் அணிந்தும் நேரடியாக மாவட்ட ஆட்சியரிடம் தங்களது கோரிக்கைகள், குறைகள் தொடா்பான மனுக்களை வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல், கரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த ஒரு மாதமாக குறைகேட்புக் கூட்டம் ரத்து செய்யப்பட்டிருந்தது. ஆட்சியா் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் பொதுமக்கள் தங்களது குறைகேட்பு மனுக்களை செலுத்தி வந்தனா். இந்த நிலையில், மீண்டும் எதிா்வரும் திங்கள்கிழமை (மாா்ச் 21) முதல் குறைகேட்புக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.