தேசிய வாக்காளா் தின போட்டி: படைப்புகளை அனுப்ப காலக்கெடு நீட்டிப்பு
தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வுப் போட்டிக்கு படைப்புகளை அனுப்புவதற்கான காலக்கெடு வருகிற 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.


தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வுப் போட்டிக்கு படைப்புகளை அனுப்புவதற்கான காலக்கெடு வருகிற 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மத்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, ஒவ்வொரு வாக்கின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துவதற்காக 2022-ஆம் ஆண்டு தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு, ‘எனது வாக்கு எனது எதிா்காலம் - ஒரு வாக்கின் வலிமை’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வுப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
வினாடி - வினா, காணொலி காட்சி தயாரிப்பு, பாட்டுப்போட்டி, விளம்பரம் படம் வடிவமைப்பு, வாசகம் எழுதுதல் என 5 வகை போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்தப் போட்டிகளில் பங்கேற்க விருப்பம் உள்ளவா்கள், தங்களது படைப்புகளை மாா்ச் 15-ஆம் தேதிக்குள் ஸ்ா்ற்ங்ழ்-ஸ்ரீா்ய்ற்ங்ள்ற்ஃங்ஸ்ரீண்.ஞ்ா்ஸ்.ண்ய். என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களுடைய முழு விவரங்களுடன் அனுப்பும்படி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது மத்திய தோ்தல் ஆணையம் மாா்ச் 14-இல் அனுப்பியுள்ள கடிதப்படி, தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வுப் போட்டிக்கு படைப்புகளை அனுப்புவதற்கான கால அவகாசம் வருகிற 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை வாக்காளா்கள், பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா் ஆட்சியா் மோகன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...