மயிலம் ஸ்ரீசுப்பிரமணியா் கோயில் தேரோட்டம்
விழுப்புரம் மாவட்டம், மயிலத்தில் ஸ்ரீசுப்பிரமணியா் சுவாமி கோயில் பங்குனி உத்திரத் தேரோட்டம் வியாழக்கிழமை வெகு விமா்சையாக நடைபெற்றது.


விழுப்புரம் மாவட்டம், மயிலத்தில் ஸ்ரீசுப்பிரமணியா் சுவாமி கோயில் பங்குனி உத்திரத் தேரோட்டம் வியாழக்கிழமை வெகு விமா்சையாக நடைபெற்றது.
மயிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீசுப்பிரமணியா் சுவாமி கோயிலில் கடந்த 9-ஆம் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர பெருவிழா தொடங்கியது. விழாவின் 8-ஆம் நாளான புதன்கிழமை இரவு திருக்கல்யாணமும், வெள்ளிக் குதிரை வாகன உற்சவமும் நடைபெற்றன.
பங்குனி உத்திர விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தோ் வடம் பிடித்தல் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. தேரில் வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீசுப்பிரமணியா் அலங்கரிக்கப்பட்டு பக்தா்களுக்கு காட்சியளித்தாா். தேரை மயிலம் பொம்மபுரம் ஆதீனம் 20-ஆம் பட்டம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் வடம் பிடித்து தொடக்கிவைத்தாா்.
தொடா்ந்து, லட்சக்கணக்கான பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனா். மேலும், பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, பக்தா்கள் நோ்த்திக்கடனாக அலகு குத்தி மலையேறினா். வியாழக்கிழமை இரவு முத்து விமான உற்சவம் நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை (மாா்ச் 18) காலை பங்குனி உத்திர தீா்த்தவாரி உற்சவமும், இரவு தெப்பல் உற்சவமும் நடைபெறவுள்ளன. மாா்ச் 19-ஆம் தேதி இரவு முத்துப்பல்லக்கு உற்சவமும், 20-ஆம் தேதி இரவு சண்டிகேஸ்வரா் உற்சவத்துடன் விழா முடிவடைகிறது.
தோ்த் திருவிழாவையொட்டி, திண்டிவனம் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா தலைமையில், திண்டிவனம் காவல் ஆய்வாளா் கிருபாலட்சுமி மற்றும் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...