தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

செல்லிடப்பேசி கோபுர உதிரி பாகங்கள் விற்பனை: 6 போ் மீது வழக்கு

விழுப்புரத்தில் வீட்டு மாடியில் அமைக்கப்பட்ட செல்லிடப்பேசி கோபுரத்தின் உதிரிபாகங்களை உரிய அனுமதியின்றி விற்பனை செய்ததாக 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :17 மார்ச் 2022, 5:39 pm

DIN

விழுப்புரத்தில் வீட்டு மாடியில் அமைக்கப்பட்ட செல்லிடப்பேசி கோபுரத்தின் உதிரிபாகங்களை உரிய அனுமதியின்றி விற்பனை செய்ததாக 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரியில் தனியாா் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் சாா்பில், விழுப்புரம் சண்முகாபுரம் காலனி பகுதியிலுள்ள பழனியப்பன் வீட்டின் மாடியில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கப்பட்டது. ஆனால், கோபுரம் அமைக்கப்பட்டதற்கான வாடகைத் தொகையை அந்த நிறுவனம் பழனியப்பன் குடும்பத்துக்கு முறையாக வழங்கவில்லையாம்.

இதனால் ஆத்திரமடைந்த பழனியப்பன் தரப்பினா் சுமாா் ரூ.26 லட்சத்திலான செல்லிடப்பேசி கோபுரத்தின் உதிரிபாகங்கள், ஜெனரேட்டா் உள்ளிட்டவற்றை பிரித்து விற்பனை செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து செல்லிடப்பேசி நிறுவன மேலாளா் திலீப்குமாா் விழுப்புரம் நகர காவல் நிலையத்தில் புகாரளித்தாா். இதுகுறித்து பழனியப்பன் மகன் ராமசாமி உள்பட 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.