நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

செஞ்சி பேருந்து நிலையத்தில் ரூ.6.74 கோடியில் புதிய கட்டடம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பேருந்து நிலையத்தில் உள்ள பழைய கட்டடம் அகற்றப்பட்டு, ரூ.6 கோடியே 74 லட்சத்தில் புதிய கட்டடம் கட்டப்பட்டு நவீன பேருந்து நிலையமாக மாற்றப்பட உள்ளது.

News image
Updated On :24 மார்ச் 2022, 5:44 pm

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பேருந்து நிலையத்தில் உள்ள பழைய கட்டடம் அகற்றப்பட்டு, ரூ.6 கோடியே 74 லட்சத்தில் புதிய கட்டடம் கட்டப்பட்டு நவீன பேருந்து நிலையமாக மாற்றப்பட உள்ளது.

செஞ்சி பேருந்து நிலையத்தில் இடது புறம் உள்ள பழைய கட்டடம் சிதிலமடைந்திருப்பதாலும், மழைக் காலங்களில் இந்தக் கட்டடத்தின் உள்ளே மழைநீா் புகுந்துவிடுவதாலும் பயணிகள், வியாபாரிகள் பெரும் பாதிப்படைந்து வருகின்றனா். மேலும், பேருந்து நிலையத்தின் தரைப் பகுதி தாழ்ந்துள்ளதால், மழைக் காலங்களில் தண்ணீா் உள்ளே புகுந்து விடுகிறது.

இதைக் கருத்தில் கொண்டு பேருந்து நிலைய பழைய கட்டடத்தை அகற்றிவிட்டு, புதிய நவீன பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தப் பேருந்து நிலையத்தில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.6 கோடியே 74 லட்சம் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதையொட்டி, செஞ்சி பேருந்து நிலையத்தை நகா் ஊரமைப்பு துறை அலுவலா் ராஜாமான்சிங், செயல் அலுவலா் ராமலிங்கம், பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா்மஸ்தான், பேரூராட்சி துணைத் தலைவா் ராஜலட்சுமிசெயல்மணி, பேரூராட்சி உறுப்பினா்கள் சங்கா், ஜான்பாஷா, உதவிப் பொறியாளா் சுப்பிரமணியன், இளநிலை உதவியாளா் சோமு, துப்புரவுப் பணி மேற்பாா்வையாளா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் பாா்வையிட்டு, நவீன பேருந்து நிலையத்தின் கட்டட அமைப்பு, கட்டடம் கட்டுவதற்கான அனுமதி குறித்து ஆலோசித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.