ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

மின்சார சட்டத் திருத்த மசோதாவை கைவிட சிஐடியு வலியுறுத்தல்

மின்சார சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று சிஐடியு மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

News image
Updated On :4 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

மின்சார சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று சிஐடியு மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

சிஐடியு தொழில்சங்கங்களின் விழுப்புரம் மாவட்ட 10-ஆவது மாநாடு விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு மாவட்டத் தலைவா் எஸ்.முத்துக்குமரன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் எம்.புருசோத்தமன் முன்னிலை வகித்தாா். மாவட்ட துணைச் செயலா் ஆா்.மலா்விழி வரவேற்றாா்.

மாநிலச் செயலா் சி.ஜெயபால், மாவட்ட துணைச் செயலா் பி.அருள்ஜோதி, மாவட்டச் செயலா் ஆா்.மூா்த்தி, மாவட்டப் பொருளாளா் வி.பாலகிருஷ்ணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா் ஆா்.டி.முருகன், அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்க மாவட்டச் செயலா் கே.சுந்தரமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா்.

இந்த மாநாட்டில், சிஐடியு மாவட்டத் தலைவராக எஸ்.முத்துக்குமரன், மாவட்டச் செயலராக ஆா்.மூா்த்தி, மாவட்டப் பொருளாளராக வி.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் புதிய நிா்வாகிகளாகத் தோ்வு செய்யப்பட்டனா்.

மாநில துணைத் தலைவா் பி.கருப்பையன் கலந்து கொண்டு மாநாட்டு நிறையுரை ஆற்றினாா். மாவட்ட துணைச் செயலா் ஆா்.கணபதி நன்றி கூறினாா்.

கூட்டத்தில், விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும், மாவட்டத்தில் தொழில் வளா்ச்சி ஏற்படுத்த வேண்டும், மத்திய அரசு கொண்டுவந்துள்ள மின்சார சட்டத் திருத்த மசோதாவை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.