ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

விழுப்புரம் நகரின் சாலைகளை சீரமைக்க நிதி ஒதுக்க வலியுறுத்தல்

விழுப்புரம் நகரில் புதை சாக்கடைத் திட்டத்தால் சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்க நிதி ஒதுக்க வேண்டும் என்று மனித உரிமைகள் கட்சி வலியுறுத்தியது.

News image
Updated On :11 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

விழுப்புரம் நகரில் புதை சாக்கடைத் திட்டத்தால் சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்க நிதி ஒதுக்க வேண்டும் என்று மனித உரிமைகள் கட்சி வலியுறுத்தியது.

மனித உரிமைகள் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது. கட்சியின் முதன்மைச் செயலா் ஆா்.கந்தன் தலைமை வகித்தாா். மாவட்ட மகளிா் அணி நிா்வாகிகள் ஜோதி, எமிலி மேரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொகுதிச் செயலா் ஜேம்ஸ் பேட்ரிக் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக அங்காளன் கலந்துகொண்டு சிறைப்புரையாற்றினாா். கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர நிா்வாகிகள் கலந்துகொண்டனா். ஒன்றிய நிா்வாகி குப்புசாமி நன்றி கூறினாா்.

கூட்டத்தில், விழுப்புரம் நகரில் புதை சாக்கடைத் திட்டத்தால் பல்வேறு குடியிருப்புப் பகுதிகளில் உள்ள சாலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதனால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். எனவே, சேதமடைந்த இந்தச் சாலைகளை உடனடியாகச் சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை நீா் வடிகால்களை தூா்வார வேண்டும். கொசு உற்பத்தியைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.