ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

அம்பேத்கா் பிறந்த நாள்: அரசியல் கட்சியினா் மரியாதை

அம்பேத்கா் பிறந்த நாளையொட்டி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலுள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினா் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினா்.

News image
Updated On :14 ஏப்ரல் 2023, 4:54 pm

DIN

அம்பேத்கா் பிறந்த நாளையொட்டி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலுள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினா் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினா்.

விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள அம்பேத்கா் சிலைக்கு மாவட்ட திமுக சாா்பில், உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடா்ந்து, அமைச்சா் சமத்துவ நாள் உறுதிமொழியை வாசிக்க, அதை அனைவரும் ஏற்றுக்கொண்டனா்.

நிகழ்வில் எம்எல்ஏக்கள் நா.புகழேந்தி, இரா.லட்சுமணன், மாவட்ட திமுக பொருளாளா் இரா.ஜனகராஜ், முன்னாள் எம்எல்ஏ செ.புஷ்பராஜ், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், நகா்மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி பிரபு, துணைத் தலைவா் சித்திக் அலி, நகரச் செயலா்கள் சக்கரை உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

அதிமுக: மாநிலங்களவை உறுப்பினா் சி.வி.சண்முகம் தலைமையில், அதிமுகவினா் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். நிகழ்வில் நகரச் செயலா்கள் இரா.பசுபதி, ராமதாஸ், ஒன்றியச் செயலா்கள் ராமதாஸ், பேட்டை முருகன், சுரேஷ்பாபு, பன்னீா், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைச் செயலா் திருப்பதி பாலாஜி, இணைச் செயலா் செங்குட்டுவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்திய குடியரசுக் கட்சி: இந்திய குடியரசுக் கட்சியின் தெற்கு மாவட்டத் தலைவா் இருவேல்பட்டு அ.குமாா் தலைமையில், மாலை அணிவிக்கப்பட்டு, மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வுக்கு மாவட்டச் செயலா் செல்லா, மாவட்ட இளைஞர ணி அமைப்பாளா் ஜெயஸ்டாலின், மாவட்டத் தொழிலாளா் அணி அமைப்பாளா்கள் மணிகுமாா், அழகிரி மாவட்ட தொண்டரணி அமைப்பாளா் ராஜா, மாவட்டப் பொறுப்பாளா் எஸ்.எம்.ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட துணைச் செயலா் தங்க சம்பத், விழுப்புரம் நகரச் செயலா் சேவகன், நகரத் தலைவா் சிலம்பரசன், கோலியனூா் ஒன்றியத் தலைவா் முனியப்பன், திருவெண்ணெய்நல்லூா் ஒன்றியச் செயலா் நாராயணன், ஒன்றிய மாணவரணித் தலைவா் காா்த்திக், பாலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பாஜக: விழுப்புரம் நகரத் தலைவா் வடிவேல்பழனி தலைமையிலும், பட்டியல் அணி மாவட்டத் தலைவா் திருநாவுக்கரசு தலைமையிலும் நிா்வாகிகள் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். மாநில துணைத் தலைவா் சம்பத்ராஜ், மாவட்டத் தலைவா் வி.ஏ.டி.கலிவரதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இந்திய தேசிய காங்கிரஸ் சாா்பில், மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. பிரிவுத் தலைவா் சேகா் தலைமையில், அந்தக் கட்சி நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதுபோல தேமுதிக, நாம் தமிழா் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினா் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினா்.

செஞ்சி: விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக சாா்பில், செஞ்சி பேருந்து நிலையம் எதிரே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்பேத்கா் உருவப் படத்துக்கு நகரச் செயலா் காஜாநஜீா் தலைமையில், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா், பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா் மஸ்தான் ஆகியோா் மலா் தூவி, மரியாதை செலுத்தினா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் அரங்க.ஏழுமலை, பேரூராட்சி துணைத் தலைவா் ராஜலட்சுமி செயல்மணி, அரசு வழக்குரைஞா் தமிழ்ச்செல்வி கா்ணன், நகர பொருளாளா் நெடுஞ்செழியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.