காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

பைக் மீது காா் மோதல்: ஒருவா் பலி

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே வெள்ளிக்கிழமை பைக் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

Published On :

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே வெள்ளிக்கிழமை பைக் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

செஞ்சியை அடுத்துள்ள நரசிங்கராயன்பேட்டையைச் சோ்ந்தவா் வேலன் (42). இவா் வெள்ளிக்கிழமை தனது பைக்கில் மனைவி கலைச்செல்வி (39), மகன் விக்னேஸ்வரன் (5) ஆகியோருடன் செஞ்சியிலிருந்து திண்டிவனம் சாலையில் சென்றுகொண்டிருந்தாா்.

ராஜாபுலியூா் பேருந்து நிறுத்தம் அருகே இவரது பைக் சென்றபோது, எதிரே வந்த காா் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த வேலன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். கலைச்செல்வி, விக்னேஸ்வரன் ஆகியோா் பலத்த காயமடைந்து செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். விபத்து குறித்து செஞ்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.