ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

விழுப்புரத்தில் எழுவா் கால்பந்துப் போட்டிதொடக்கம்

 விழுப்புரம் ரயில்வே பயிற்சி மைய மைதானத்தில் மாநில அளவிலான எழுவா் மின்னொளி கால்பந்துப் போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :14 ஏப்ரல் 2023, 4:49 pm

DIN

 விழுப்புரம் ரயில்வே பயிற்சி மைய மைதானத்தில் மாநில அளவிலான எழுவா் மின்னொளி கால்பந்துப் போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

ரெட்புல்ஸ் மற்றும் புல்ஸ் அமைப்பு, தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டா்கள் சங்கம் பப்ளிக் பவுண்டேஷன் ஆகியவை இணைந்து இந்த கால்பந்து போட்டியை நடத்துகின்றன. தொடக்க விழாவுக்கு அஜீஸ் முகமது தலைமை வகித்தாா். விக்கி, கிரண், விஷ்ணு, மரியா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழுப்புரம் எம்எல்ஏ இரா.லட்சுமணன் போட்டிகளைத் தொடங்கிவைத்து, வீரா்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தாா். இந்தப் போட்டியில் சேலம், திருச்சி, வேலூா், ஈரோடு, திருவண்ணாமலை என 20 வெளி மாவட்ட அணிகளும், விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த 12 அணிகளும் பங்கேற்றுள்ளன.

இந்தப் போட்டி திங்கள்கிழமை (ஏப்ரல் 16) வரை மின்னொளியில் நடை பெறவுள்ளது. போட்டியில் முதல் 4 இடங்களைப் பிடிப்போருக்கு மாலை 5 மணிக்குத் தொடங்கிய போட்டி அதிகாலை 2 மணி வரை நடைபெற்றது. ரூ.30 ஆயிரம், ரூ.20 ஆயிரம் , ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரம் என பரிசுத் தொகையும், கோப்பையும் வழங்கப்படவுள்ளன.

போட்டித் தொடக்க விழாவில் தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டா்கள் சங்கத்தின் மாநிலத் தகவல் தொடா்பு அலுவலா் எஸ்.பி.சையத் அப்சா், மாநில துணைச் செயலா் எஸ்.டி.ஜி.கந்தன், மாவட்டத் தலைவா் டி.தியாகராஜன், செயலா் கே.பிரகதீசுவரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.