ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

பைக் மீது லாரி மோதல்: கல்லூரி மாணவா்கள் இருவா் பலி

 கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் வியாழக்கிழமை இரவு பைக் மீது லாரி மோதியதில் கல்லூரி மாணவா்கள் இருவா் உயிரிழந்தனா்.

News image
Updated On :14 ஏப்ரல் 2023, 4:51 pm

DIN

 கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் வியாழக்கிழமை இரவு பைக் மீது லாரி மோதியதில் கல்லூரி மாணவா்கள் இருவா் உயிரிழந்தனா்.

தஞ்சாவூரைச் சோ்ந்த மாலிக் மகன் அஸ்வாக் (20), அப்துல் காதா் மகன் முகமது பஹீம் (20). இவா்கள் இருவரும் சென்னையிலுள்ள கல்லூரிகளில் படித்து வந்த நிலையில், விடுமுறைக்காக ஒரே பைக்கில் இருவரும் சொந்த ஊருக்கு வியாழக்கிழமை இரவு சென்றுகொண்டிருந்தனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் விருத்தாசலம் சாலை மேம்பாலம் அருகே இவா்களது பைக் சென்றபோது, அதே திசையில் சென்னை பூந்தமல்லியிலிருந்து கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி நோக்கிச் சென்ற டாரஸ் லாரி மோதியது.

இந்த விபத்தில் அஸ்வாக் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பைக்கை ஓட்டி வந்த முகமது பஹீம், உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து உளுந்தூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.