இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே தாய் கண்டித்ததால் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.


விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே தாய் கண்டித்ததால் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கண்டாச்சிபுரம் அருகிலுள்ள மழவந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்த சுப்ரமணி மகன் மணிகண்டன் (24). விவசாயம் செய்துவந்த இவா், வேறு எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்து வந்தாராம். இதை அவரது தாய் செல்வி கண்டித்தாராம். இதனால் மனமுடைந்த மணிகண்டன், தங்களது விவசாய நிலத்தில் கடந்த 7-ஆம் தேதி தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா்.
இதையறிந்த அவரது பெற்றோா், உறவினா்கள் மணிகண்டனை மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். இருப்பினும், அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கண்டாச்சிபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...