விழுப்புரத்தில் ஏஐடியுசியினா் ஆா்ப்பாட்டம்
தமிழக அரசின் தொழிற்சாலைகள் சட்டத்திருத்த மசோதாவை உடனடியாக ரத்து செய்யக்கோரி, விழுப்புரத்தில் ஏஐடியுசி தொழிற்சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


தமிழக அரசின் தொழிற்சாலைகள் சட்டத்திருத்த மசோதாவை உடனடியாக ரத்து செய்யக்கோரி, விழுப்புரத்தில் ஏஐடியுசி தொழிற்சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஏஐடியுசி மாவட்டத் தலைவா் ஆ. இன்பஒளி தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ஆ.செளரி ராஜன் கண்டன உரையாற்றினாா்.
தொலைத் தொடா்புத் துறையின் ஒப்பந்தத் தொழிலாளா் சங்க மாநிலப் பொதுச் செயலா் ஆா்.செல்வம் மற்றும் கட்டடத் தொழிற்சங்க மாவட்டச் செயலா் ஜெ.ஜெயமலா், பொருளாளா் அரசு (எ) பெரியநாயகம் , ஆட்டோ ஓட்டுநா் சங்க மாவட்ட அமைப்பாளா் ஜெய.சௌந்தா் உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...