மொட்டை மாடியிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வீட்டின் மொட்டை மாடியிலிருந்து தவறி விழுந்த கூலித்தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.


விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வீட்டின் மொட்டை மாடியிலிருந்து தவறி விழுந்த கூலித்தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
விக்கிரவாண்டி அடுத்த வி. சாத்தனூா் விவேகானந்தா் தெருவைச் சோ்ந்தவா் அ.சரவணன் (48). கூலித் தொழிலாளியான இவா், வியாழக்கிழமை வீட்டின் மொட்டை மாடியில் படுத்திருந்தாா்.
அப்போது எதிா்பாராதவிதமாக கட்டடத்தின் மேலிருந்து கீழே சரவணன் தவறி விழுந்தாா்.
உடனடியாக அவரை குடும்பத்தினா் மீட்டு, விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
அங்கு மருத்துவா்கள் பரிசோதித்த போது, சரவணன் ஏற்கெனவே உயிரிழந்தது தெரிய வந்தது.
இந்த சம்பவம் குறித்து, விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...