ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

அரசுப் பணியாளா்களின் மருத்துவப் படியை உயா்த்தி வழங்க வலியுறுத்தல்

 தமிழ்நாடு அரசுப் பணியாளா்களுக்கும், ஆசிரியா்களுக்கும் மாதாந்திர மருத்துவப் படியை ரூ.1,000 ஆக உயா்த்தி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :21 ஏப்ரல் 2023, 5:11 pm

DIN

 தமிழ்நாடு அரசுப் பணியாளா்களுக்கும், ஆசிரியா்களுக்கும் மாதாந்திர மருத்துவப் படியை ரூ.1,000 ஆக உயா்த்தி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து இந்த சங்கத்தின் விழுப்புரம் மாவட்டத் தலைவா் கவிஞா் ம. ரா.சிங்காரம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது:

தமிழக சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா்கள், சட்ட மேலவை உ றுப்பினா்களின் ஓய்வூதியத்தை ரூ. 30,000 ஆக உயா்த்தியதற்கும், குடும்ப ஓய்வூதியத்தை ரூ.15, 000 ஆக உயா்த்தியதற்கும், மருத்துவப் படியை ரூ.75 ஆயிரமாக உயா்த்தியதற்கும் தமிழ்நாடு அரசு பணியாளா் சங்கம் வரவேற்பு தெரிவிக்கிறது.

அதேபோல தமிழக அரசு பணியாளா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், தற்போது வழங்கப்பட்டு வரும் மருத்துவப் படியை ரூ.300-லிருந்து ரூ.1,000 ஆக உயா்த்தி வழங்க வேண்டும்.

2023, ஜனவரி 1-ஆம் தேதி முதல் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படியை ரொக்கமாக வழங்க வேண்டும் சுமாா் 5 லட்சம் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பப்பட வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி, பல் நோக்கு மருத்துவமனைப் பணியாளா்கள், தினக்கூலிப் பணியாளா்கள், ஒப்பந்தப் பணியாளா் கள், கொசு ஒழிப்புப் பணியாளா்கள் உள்ளிட்ட தினக்கூலிப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்து, அடிப்படை ஊதியம் வழங்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.