புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

விழுப்புரம் மாவட்டத்தில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள நான்கு மின்வாரியக் கோட்டங்களில்  நுகா்வோா் குறை தீா் கூட்டம்  நடைபெறவுள்ளது.

News image
Updated On :29 ஏப்ரல் 2023, 5:03 pm

DIN

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள நான்கு மின்வாரியக் கோட்டங்களில்  நுகா்வோா் குறை தீா் கூட்டம்  நடைபெறவுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் விழுப்புரம் மேற்பாா்வைப் பொறியாளா் ராஜேந்திரவிஜய் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கோட்ட அளவிலான மாதாந்திர  மின் நுகா்வோா்  குறைதீா்  கூட்டம்  விழுப்புரம் மேற்பாா்வைப் பொறியாளா் தலைமையில் நடத்தப்பட்டு,  நுகா்வோா்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுத் தீா்வு காணப்படும். அதன்படி, மே 2-ஆம்தேதி (செவ்வாய்க்கிழமை) விழுப்புரம் கோட்ட  மின்  செயற்பொறியாளா் அலுவலகத்தில் முற்பகல் 11 மணிக்கு  நுகா்வோா்  குறைதீா்  கூட்டம்  நடைபெறுகிறது.

கண்டமங்கலம் கோட்டச் செயற்பொறியாளா் அலுவலகத்தில் மே 9-ஆம் தேதியும், செஞ்சியில் மே 16-ஆம் தேதியும், திண்டிவனத்தில் மே 23-ஆம் தேதியும்  கூட்டம்  நடைபெறுகிறது.

இதில், அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த  மின் நுகா்வோா்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம்.  கூட்டம்  நடைபெறும் நாள் அரசு விடுமுறையாக இருந்தால், விடுமுறைக்கு அடுத்து வரும் வேலை நாளில்  கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.